பார்க்க, ரசிக்க, பயன்படுத்த 30 அலைபேசி அசைபடங்கள்
இது போன்று 30 படங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
ஞாயிறு, 7 நவம்பர், 2010
வியாழன், 30 செப்டம்பர், 2010
பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..பெரிய கோயில் அளவுகோல்...எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.சாரங்களின் அமைப்புகருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு,
சோழர் சிலை
அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் நகரம்!
தெருக்கள்(தஞ்சாவூர்ப் புறம்படி)காந்தர்வத் தெரு, மடைப்பள்ளித் தெரு, வில்லிகள் தெரு, ஆணைகடுவார் தெரு, ஆனை ஆட்கள் தெரு, பன்மையார் தெரு, சாலியத் தெரு. பெருந்தெருக்கள்மும்முடிச்சோழப் பெருந்தெரு, நித்தவினோதப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, செயங்கொண்ட சோழப் பெருந்தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, சூரசிகாமணிப் பெருந்தெரு.சோழ மன்னர்கள் பெயரில் ஆறுகள்முடி கொண்ட சோழப் பேராறு, தண் பொருத்தமான முடி கொண்ட சோழப் பேராறு, சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு, அகளங்கப் பேராறு, மதுராந்தக வடவாறு, வீரசோழ வடவாறு, வீரராசேந்திர சோழ வடவாறு, விக்கிரமனாறு, கரிகாலச் சோழப் பேராறு (கொள்ளிடம்), வீரசோழனாறு. பேரங்காடி(தற்போதைய சூப்பர் மார்க்கெட் முறை) திரிபுவன மாதேவி பேரங்காடி.
சோழர்கால நாணயங்கள்
கி.பி. 985}1014 காலகட்டத்தில் இலங்கையில் ராஜராஜ சோழனால் புழக்கத்துக்கு விடப்பட்ட தங்க நாணயங்கள்.
புதன், 22 செப்டம்பர், 2010
எபிக் - 3
எபிக் இணைய உலாவியில் Side Bar ல் 1500 பயன்பாட்டுத் தொகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் சமூக வலை தளமான பேஸ்புக், டிவிட்டர், மின்னஞ்சல் தளமான
Gmail, இண்டியா டுடே, Citi Bank போன்றவைகள் முக்கியமானவைகள் ஆகும்.
இத்துடன் 1000 க்கு மேற்பட்ட நெருப்புநரி plugins களையும் பயன்படுத்தலாம்
குக்கிகளை எளிமையாக நீக்கலாம்,
Private Browsing க்கும் ஆதரவு தருகிறது. இதனால் நமது Browsing Reports சேமிக்கப்படுவதில்லை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த எபிக் இணைய உலாவிக்கு மாறுவோம்.

வியாழன், 2 செப்டம்பர், 2010
எபிக்-2 (Epic)
எபிக்-2 (Epic)
எபிக்கின் வேகம்
எபிக் இணைய உலாவி நெருப்பு நரியை (Fire Box) அடிப்படையாக கொண்ட திறமூல மென்பொருளாகும்,
எனவே இது அதிவேகமாக செயல்படுகிறது. இணைய பக்கங்களை மின்னல் வேகத்தில் திறக்கிறது.
இந்திய மொழிகளின் ஆதரவு.
இது இந்திய தயாரிப்பு, எனவே இந்திய மொழிகளை மிகவும் சிறப்பாக ஆதரிக்கிறது, மிகவும் எளிமையாக
தட்டச்சு செய்யவும் முடிகிறது.
இதை மிகவும் எளிமையாக செயல்படுத்த முடியும். எபிக்கின் Side Barல் உள்ள இன்டிக் என்பதனை சுட்டும்போது,
Epic Indic Text என்ற விண்டோ தோன்றுகிறது. அதில் default மொழியாக தமிழை தேர்வு செய்து எழிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம்.
ஒருங்கிணைந்த Antivirus ஐ எவ்வாறு செயல்படுத்துவது.
Side Bar-ல் உள்ள நச்சு நிரல் எதிர்ப்பானை(Antivirus) ஐ கிளிக் செய்யாவேண்டும். Epic உடன் ESET NOD32 Antivirus 4 இணைக்கப்பட்டுள்ளது, இத்துடன்
Antispyware & ESET Smart Security 4 Firewall & Antispam போன்ற பாதுகாப்பும் உள்ளது, இவை அனைத்தும் சுமார் 1199 விலை உள்ளது.
இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பதிவிறக்க கோப்புகளை சோதிப்பதோடு மட்டுமின்றி, நமது கணினியையும் சோதித்து நச்சு நிரல்களை
நீக்குகிறது.
Epic இணைய உலாவியின் தீமை மாற்றுதல்.
Side Bar-ல் உள்ள ஸ்கின்ஸ் (Skins) என்பதனை கிளிக் செய்யும்போது நமக்கு பல்வேறு Skins அடங்கிய விண்டோ திறக்கிறது. அதில்
பல்வேறு தலைப்புலகளின் கீழ் ஆயிரக்கணக்கான தீம்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
கலை, கலாச்சாரம், மக்கள், விளையாட்டு, மொழி, இசை, அரசியல், இயற்கை போன்ற பல்வேறு தலைப்புகள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியம் என்ற தலைப்பில் சென்றால் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, போன்ற பிரிவுகளின் கீழ் வாகைபடுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்புகளை கொண்ட தீம்களில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
தொடரும்...

திங்கள், 9 ஆகஸ்ட், 2010
இந்திய தயாரிப்பு புதிய இணைய உலாவி Epic
இந்தியர் என்பதில் பெருமிடம் கொள்வோம், ஆம் நமது பெங்களூருவை சேர்ந்த இந்திய நிறுவனம்
Hidden Reflex Epic Browser என்ற புதிய இணைய உலாவியை மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளது.
இந்த இணைய உலாவியின் தற்போதைய வடிவமைப்பு எண் Epic Browser 1.1 ஆகும், இது
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
1. AntiVirus Scanner உள்ளினைந்தது
2. word processor உள்ளினைந்தது
3. இத்துடன் Facebook, Twitter, Gmail, Orkut, Yahoo, Downloads, போன்ற 1500 க்கு மேற்பட்ட
Applications களை தன்னிடத்தே கொண்டுள்ளது.
4. இத்துடன் உங்கள் உலாவியை அழகுபடுத்த பல வகையான தீம்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இவற்றையெள்ளாம்விட இது ஒர் இந்திய தயாரிப்பு என்பதெ இதன் முக்கிய சிறப்பாகும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தொடரும் ...

வெள்ளி, 30 ஜூலை, 2010
உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி
வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார்.
விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.
அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.
நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.
நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.
வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.
விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.
வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.
ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.
அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.
கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.
திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.
கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.
வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.
சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.
சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.
விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.
பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்
புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.
தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.
அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.

வெள்ளி, 14 மே, 2010
பொறியியல் மட்டுமே படிப்பா?
புற்றிசல் போல் தமிழகத்தில் தற்போது எங்கு நோக்கினும் பொறியியல் கல்லூரிகள். எந்த மாணவரைக் கேட்பினும் பொறியியல் மாணவர்கள். ஆண்டுக்கு 50-புதிய பொறியியல் கல்லூரிகளேன தற்போது தமிழகத்தில் சுமார் 427 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதைத்தவிர பல பல்கலைக்கழகங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் பொறியியல் படிப்புகளை கணக்கு வரையற்ற அளவில் வழங்கி வருகின்றன.ஆண்டுக்கு சுமார் இரண்டு இலட்சம் பொறியியல் மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமிருந்து வெளிவருகின்றனர். இப்படி பொறியியல் பற்றியதான மோகம், தமிழகத்தில் முற்றிவிட்டதன் காரணம் பொறியியல் படித்துமுடித்தவுடன் கைநிறைய சம்பளம் பன்னாட்டு நிறுவனங்களில் கிடைத்துவிடுகிறது என்கிற நம்பிக்கைதான். இதில் உண்மையும் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பாக.ஆனால், தற்போது நிலைமை வேறு. பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார தேக்கநிலை என உலகப் பொருளாதாரமே தள்ளாட்டம் கண்டுவிட்ட நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுவிட்டன. பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் கூட அதிகளவில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் மந்தை மந்தையாக பொறியியல் படிப்பினை படிப்பது புத்திசாலித்தனமாககுமா என்பதை சிறிது பொறுமையுடன் யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஓரளவிற்கு உயர்ந்த/சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டவர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை. காரணம், அவர்களுக்கு வளாகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிடும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், இந்த உப்புமா கல்லூரிகளில் படிப்பவர்களின் நிலைதான் பெரும் திண்டாட்டம்/போராட்டம். படிப்பு முடித்தும் கூட வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒண்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவது இந்த உப்புமா கல்லூரி மாணவர்கள் தான். பணத்தை வாரியிறைத்தும் தன் மகனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் பெற்றோருக்கு இருப்பது தொடர்கதையே. அரசே, எல்லோருக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவது என்பது இயலாத காரியம். தற்போது ஓரளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்திருப்பதன் காரணம் தனியார் நிறுவனங்களின் அசுரவளர்ச்சி தான். ஆனால், இவர்களும் தற்போது கடுமையான நிதிநெருக்கடியினால் முன்புபோல வேலைவாய்ப்பினை வாரிவழங்குவது கிடையாது.
மென்பொருள் நிறுவனங்களைப் பொறுத்தவரை அனுபவத்திற்கு மட்டுமே முதல்நிலை. படிப்பெல்லாம் கடைநிலை தான். ஆதலால், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமெனில் கட்டாயம் பொறியியல் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவிற்கு சிறந்த கல்லூரியில் B.Sc (Maths, Physics, Chemistry. IT), B.C.A., B.Com.,B.A(Economics) & Diploma படித்தவர்கள் கூட மென்பொருள் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தில் சேரமுடிகிறது. பொறியியல் படித்தவர்களும், இவர்களும் ஒரே சம்பளத்தைத் தான் பெறுகின்றனர். அப்படியிருக்க ஏன் அநாவசியமாக பணத்தை இறைத்து பொறியியல் படிக்க வேண்டும்?
எண்ணற்ற கலைப்பாடங்கள் தற்போது வழக்கொழிந்து வருவது வேதனைக்குரியது. வாழ்க்கையை ரசிக்கக் கற்றுத்தருவது கலைப்பாடங்கள் தான் என்றால் அது மிகையாகாது. அத்தகைய கலைப்பாடங்கள் மறைந்துவருவது துரதிருஷ்டவசமானது. மறைந்துவருவதன் காரணம் இத்தகைய படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதில் உண்மையிருப்பதாகவே தோன்றும்.ஆனால், உண்மையில் எல்லாப் பாடங்களும் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவன தான்.அதற்கு, நாம் நம்மை எந்தளவுக்கு தயார்படுத்திக்கொள்கிறோம் என்பதனைப் பொறுத்தது.
பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு கல்லூரிகள் மிகவும் குறைவு. ஆனால், அம்மாநிலத்திலிருந்துதான் பல IAS, IPS ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள். எப்படி? அங்கு ஆரம்பத்திலிருந்தே போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்ற படிப்பினையே(B.A – History, Political Science, Sociology, Economics) தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்வுகளிலும் எளிதாக வெற்றிபெறுகிறார்கள். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை யாவரும் அறிந்தது பொறியியல் படிப்புகளும் அதுசார்ந்த வேலைவாய்ப்புகளும் தான். தமிழகத்தில் எத்தனை C.A., இருக்கிறார்கள்? வடமாநிலங்களில் B.Com., படித்துவிட்டு மூன்றாண்டுகளிலேயே C.A., யும் முடித்துவிட்டு இலட்சங்களில் ஊதியம் பெறுகின்றனர்.
சமீபத்தில் பத்திரிக்கையில் படித்த செய்தி என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலூர் அரசு கலைக்கல்லூரியில் M.A History படிக்க கூவிக்கூவி அழைத்தும் யாரும் படிக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் படிப்புக் கட்டணம் வெறும் ரூ.5 மட்டும் தான். இம்மாதிரியான கலைப்பாடங்களை படிக்க அரசு ஊக்குவிப்பது கிடையாது. அதுமட்டுமல்லாது, குறைந்தளவு மாணவர் சேர்க்கையிருப்பின் அப்பாடங்களை மூடிவிடவும் அறிவுரை வழங்கியுள்ளது. பொறுப்புள்ள அரசாக செயல்படாமல் வணிகநோக்கில் செயல்படும் அரசின்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, தமிழ்பாடங்கள் தமிழகத்தைவிட்டு மறைந்து வருகிறது. தமிழ் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் மற்ற பாடங்களும் மறைந்துவிட்டதெனில் தமிழக மாணவர்கள் எந்திரத்தன்மையில் தான் செயல்படுவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)