திங்கள், 22 ஆகஸ்ட், 2011

10 things to know about Anna Hazare 'n Jan Lok Pal Bill.. !



1. Who is Anna Hazar...e?
An ex-army man. Fought 1965 Indo-Pak War

2. What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra

3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.
In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.


4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.

5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

6. How that can be possible?
He
is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman 
Bill), that will form an autonomous authority who will make politicians 
(ministers),
beurocrats (IAS/IPS) accountable for their deeds.


8. It's an entirely new thing right..?
In
1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. 
Since then it has been neglected by the politicians and some are trying 
to change the
bill to suit thier theft (corruption).


7. Oh.. He is going on a 
hunger strike for that whole thing of passing a Bill ! How can that be 
possible in such a short span of time?
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.
Next, they make a joint 
committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 
50% public participation. Because you cant trust the government entirely
for making such a bill which does not suit them.

8. Fine, What will happen when this bill is passed?
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India.
In each and every state, Lokayukta
will be appointed. The job is to bring all alleged party to trial in 
case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be 
punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.


9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.
Prominent personalities like Aamir Khan is supporting his cause.

10. Ok, got it. What can I do?
At least we can spread the message.

வியாழன், 28 ஜூலை, 2011

சளித் தொல்லை


சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மூலையில் படுத்துவிடவேண்டாம். இதற்கு எனக்கு தெரிந்த முறைகளை சொல்கிறேன். அதை பயன்படுத்தி பயன் அடைந்தால் மகிழ்ச்சியே.

1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.

6.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

நன்றி : http://pattivaithiyam.blogspot.com

வெள்ளி, 24 ஜூன், 2011

கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையில் தமிழ்

கூகுள் நிறுவனம் இன்று (22.06.2011) மொழிபெயர்ப்பு சேவையை தமிழ் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் விரிவுபடுத்தியுள்ளது.

         2009 ஆம் ஆண்டு 11 மொழிகளில் தொடங்கப்பட்ட இச்சேவை தற்போது
63 மொழிகளில் செயல்படுகிறது. தற்போது தமிழ்,பெங்காலி, குஜராத்தி, கன்னடம்,
தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளில் இன்றுமுதல் செயல்படுகிறது .

 www.thehindu.com இன் முகப்பு பக்கத்தில் அமைந்துள்ள வாசகம்

    The Hindu has a new and redesigned website at http://www.thehindu.com. Please go to http://www.thehindu.com for the latest news, analysis and opinion from one of India's most respected newspapers.

This site hosts the legacy archives of stories from the newspaper's print editions from January 1, 2000 to May 31, 2010. Please use the date picker below to view stories for a particular date. The print edition stories archive from June 1, 2010 onwards is available at the new website. 


கூகுளில் மொழிபெயர்த்த பின்பு


      இந்து மதம் ஒரு புதிய மற்றும் மறுவடிவமைப்பு வலைத்தளம் கொண்டிருக்கிறது http://www.thehindu.com . Please go to http://www.thehindu.com for the latest news, analysis and opinion from one of India's most respected newspapers. போய் செய்யவும் http://www.thehindu.com சமீபத்திய செய்தி, பகுப்பாய்வு மற்றும் இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் செய்தித்தாள்கள் ஒருவர் கருத்தை.

This site hosts the legacy archives of stories from the newspaper's print editions from January 1, 2000 to May 31, 2010. இந்த தளத்தில் ஜனவரி 1, 2000 முதல் மே 31, 2010 செய்தித்தாள் அச்சு பதிப்புகளில் இருந்து கதைகளை மரபுரிமையை முந்தைய நடத்துகிறது. Please use the date picker below to view stories for a particular date. ஒரு குறிப்பிட்ட தேதி கதைகள் பார்வையிட கீழே தேதி தெரிவு பயன்படுத்தி கொள்ளவும். The print edition stories archive from June 1, 2010 onwards is available at the new website. ஜூன் 1 முதல் அச்சு பதிப்பு கதைகள் காப்பகத்தை, 2010 முதல் புதிய இணையதளம் கிடைக்க உள்ளன.

 
தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக புரியவில்லை என்ற போதும் பிற்காலத்தில் இக்குறை படிபடியாக சரிசெய்யப்படும் என நம்புவோம்.






ஞாயிறு, 6 மார்ச், 2011

உங்கள் வலைபூவில் கிரிக்கெட் ஸ்கோர்

உங்கள் வலைபூவில் கிரிக்கெட் ஸ்கோர்


உங்கள் உரலில் http://www.vcricket.com/ பக்கத்திற்கு செல்லவும்


அதில் Put Our Live Scoreboard  in your Website/Blog என்ற இணைப்பை சொட்டுக்க்கவும்.

அதில் Click Here to generate free Live Cricket Scorecard code for your website today.
என்ற இணைப்பை சுட்டவும்.

அதில் உங்கள் வலை பூவிற்கான Developer key பெற Dont have one? get it from here
என்பதை சுட்டி உங்கள் வலைப்பூவிற்கான முகவரியை கொடுக்கவும்.

இப்போது உஙளுக்கு   Developer key வழங்கப்பட்டும்.

அதை Developer key என்ற இடத்தில் இட்டு பின்பு Score Board வடிவை தேர்வு செய்யவும்.

Select the team  என்பதில் உஙளுக்கு பிடித்த team அல்லது All teams ஐ தேர்வு செலய்யவும்.

கடைசியாக Generate the code மற்றும் Copy Code தேர்வு செய்து உங்கள் பிளாக்கரில்  http://www.blogger.com/add-widget 
முலம் இணைப்பு கொடுக்கவும்.



சனி, 8 ஜனவரி, 2011

தைப்பொங்கல் வரலாறு

தைப்பொங்கல்

   
தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


தைப்பொங்கல் வரலாறு

 

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன் உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

போகி


போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
  • பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
  • போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர
  •  
     

    தைப்பொங்கல்

     

    தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    மாட்டுப் பொங்கல்

     

    உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

    காணும் பொங்கல்

     

    காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

    இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

     

    பொங்க வைக்கும் முறை

    தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
    பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


    சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

    “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
    “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
    “”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
    “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
    “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

     அனைவருக்கும் இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள்

     

     

    ஞாயிறு, 26 டிசம்பர், 2010

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    இதுவரை சென்றது 
    நல்ல விசயங்களுடன் 
    சில தீமைகள் நம் வாழ்வில்
    இனி பிறப்பது 
    நன்மை தரும் விசயங்கள் மட்டுமே

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


    புதன், 8 டிசம்பர், 2010

    உங்கள் நோக்கியா போன் திரையை தழைகீழாக மாற்ற



    *#5512# திரையை வலது பக்கமாக திருப்ப

    *#5513# திரையை தழைகீழாக திருப்ப

    *#5514# திரையை இடது பக்கமாக திருப்ப

    *#5511# திரையை சாதாரன நிலைக்கு கொண்டுவர

    இவை பின்வரும் நோக்கியா போன்களில் சோதனை செய்யப்பட்டது

                            1200,  1208 , 1209, 
                            1600, 1650, 2310, 
                                     2600