வியாழன், 2 செப்டம்பர், 2010

எபிக்-2 (Epic)

எபிக்-2 (Epic)

எபிக்கின் வேகம்

    எபிக் இணைய உலாவி நெருப்பு நரியை (Fire Box) அடிப்படையாக கொண்ட திறமூல மென்பொருளாகும்,
எனவே இது அதிவேகமாக செயல்படுகிறது. இணைய பக்கங்களை மின்னல் வேகத்தில் திறக்கிறது.

இந்திய மொழிகளின் ஆதரவு.


    இது இந்திய தயாரிப்பு, எனவே இந்திய மொழிகளை மிகவும் சிறப்பாக ஆதரிக்கிறது, மிகவும் எளிமையாக 
தட்டச்சு செய்யவும் முடிகிறது.





    இதை மிகவும் எளிமையாக செயல்படுத்த முடியும். எபிக்கின் Side Barல் உள்ள இன்டிக் என்பதனை சுட்டும்போது,
Epic Indic Text என்ற விண்டோ தோன்றுகிறது. அதில் default மொழியாக தமிழை தேர்வு செய்து எழிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம்.



ஒருங்கிணைந்த Antivirus ஐ எவ்வாறு செயல்படுத்துவது.

    Side Bar-ல் உள்ள  நச்சு நிரல் எதிர்ப்பானை(Antivirus) ஐ கிளிக் செய்யாவேண்டும். Epic உடன் ESET NOD32 Antivirus 4 இணைக்கப்பட்டுள்ளது, இத்துடன்
Antispyware & ESET Smart Security 4 Firewall & Antispam போன்ற பாதுகாப்பும் உள்ளது, இவை அனைத்தும் சுமார் 1199 விலை உள்ளது.



    இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பதிவிறக்க கோப்புகளை சோதிப்பதோடு மட்டுமின்றி, நமது கணினியையும் சோதித்து நச்சு நிரல்களை
நீக்குகிறது.


  

Epic இணைய உலாவியின் தீமை மாற்றுதல்.

    Side Bar-ல் உள்ள ஸ்கின்ஸ் (Skins) என்பதனை கிளிக் செய்யும்போது நமக்கு பல்வேறு Skins அடங்கிய விண்டோ திறக்கிறது. அதில்
பல்வேறு தலைப்புலகளின் கீழ் ஆயிரக்கணக்கான தீம்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
   
    கலை, கலாச்சாரம், மக்கள், விளையாட்டு, மொழி, இசை, அரசியல், இயற்கை போன்ற பல்வேறு தலைப்புகள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.



பிராந்தியம் என்ற தலைப்பில் சென்றால் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, போன்ற பிரிவுகளின் கீழ் வாகைபடுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்புகளை கொண்ட தீம்களில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.


தொடரும்...
 

2 கருத்துகள்:

  1. நான் எபிக் இனைய உலாவியைதான் உபயோகிக்கிறேன். அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அதுவும் இந்திய மொழிகளில் இருப்பது மிக அற்புதம்.

    உங்களின் ஜாதகம், கல்வி, காதல், திருமணம் மற்றும் உங்களின் எதிர்காலம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இன்றே www.yourastrology.co.in என்னும் இணையத்தில் சென்று பாருங்கள். மேலும் இதில் தான் முதன்முதலாக ஜாமகோள் ஜோதிடம் மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. Wonderful blog! Thanks for sharing this information. It was very useful information for me I really appreciate your work. The GoodWood is the best Interior Designer in Noida. The GoodWood provides many types of design services to clients such as Exterior Designing, Commercial Designing and Interior Designing.

    பதிலளிநீக்கு